நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் வீரர் விலகல்

image courtesy:twitter/@ICC
நியூசிலாந்து - பாகிஸ்தான் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 2-ம் தேதி நடைபெற உள்ளது.
ஹாமில்டன்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 2-ம் தேதி ஹாமில்டனில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியிலிருந்து பாகிஸ்தான் தொடக்க வீரரான உஸ்மான் கான் விலகியுள்ளார். முதல் போட்டியின்போது பீல்டிங் செய்கையில் இவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2-வது போட்டியில் இவர் களமிறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இவர் முதல் போட்டியில் 39 ரன்கள் அடித்திருந்தார்.
Related Tags :
Next Story






