2-வது ஒருநாள் போட்டி: கில், இஷான் கிஷன் அதிரடி சதம்

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 2-வது ஒருநாள் போட்டி: கில், இஷான் கிஷன் அதிரடி சதம்
Published on

லக்னோ,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று லக்னோவில் 2-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் அவுட்டானார்.3வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் அதிரடியில் இறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்

பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட சுப்மன் கில், இஷான் கிஷன் இருவரும் சதமடித்து அசத்தினார். தொடர்ந்து இந்திய அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com