2வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது.
2வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ஹர்மன்பிரீத் கவுர் 54 ரன்களும் , பிரதிகா ரவல் 52 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 252 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com