2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா


2வது ஒருநாள் போட்டி:  இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா
x

இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் மட்டுமே எடுத்தது.

லண்டன்,

பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. லீட்சில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பந்துவீச்சை செய்தார் அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை செய்தார் அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 85 ரன்களும் (77 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 58 ரன்களும், மார்க்ரம் 49 ரன்களும், பிரேவிஸ் 42 ரன்களும் விளாசினர்.

தொடர்ந்து 331 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோர் அரைசதமடித்தனர் . தென் ஆப்பிரிக்கா சார்பில் நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியது

1 More update

Next Story