2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

மெக்காய்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் கெய்ன்ஸ் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 98 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மெக்காய் நகரில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா முனைப்பு காட்டும். அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக ஆஸ்திரேலியா கடுமையாக போராடும்.

இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com