2-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை


2-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை
x

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 122 ரன்கள் அடித்தார்.

ஹராரே,

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் கர்ரன் 79 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் சமீரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 278 ரன் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா சதம் (122 ரன்) அடித்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பதும் நிசங்கா தட்டி சென்றார்.

1 More update

Next Story