2-வது ஒருநாள் போட்டி: தொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா..? இலங்கையுடன் நாளை மோதல்

2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கொழும்பு,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பு மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெற்று சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இலங்கை களமிறங்க உள்ளது. மறுபுறம் தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
Related Tags :
Next Story






