2வது டி20: இலங்கை அணிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்


2வது டி20: இலங்கை அணிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்
x

லிட்டன் தாஸ் அரைசதமடித்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார்

தம்புல்லா,

வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதலாவது ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி தம்புல்லாவில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ஹொசைன் எமோன் டக் அவுட் ஆனார். பின்னர் தன்சிட் ஹாசிம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார் .தொடர்ந்து லிட்டன் தாஸ், டவ்கித் ஹிரோடி இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் அதிரடியாக ரன்கள் குவித்தனர் .

ஹிரோடி 31 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் லிட்டன் தாஸ் அரைசதமடித்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷாமின் ஹொசைன் 48 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 178 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

1 More update

Next Story