

சிட்னி,
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி சிட்னி நகரில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ வேட் மற்றும் டி ஆர்சி ஷாட் களமிறங்கினர்.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட்(58 ரன்கள்), ஸ்டீவன் ஸ்மித்(46 ரன்கள்) குவித்தனர். மேக்ஸ்வெல் 22 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து தற்போது 195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் முதலாவது டி-20 ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தமிழக வீரர் நடராஜன், இன்றும் தனது யார்க்கர் மாயாஜாலத்தை நிகழ்த்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டி ஆர்சி ஷாட்(9 ரன்கள்) மற்றும் ஹென்ரிக்ஸ்(26 ரன்கள்) ஆகிய இருவரும் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
இன்றைய ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசிய நடராஜன் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளது. இதற்கு முன் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் 3வது ஆட்டத்தில் களமிறங்கிய நடராஜன், 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.