2வது டி20: இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2வது டி20: இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
Published on

லண்டன்,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந் தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டி20 போட்டி செம்ஸ்போர்டுவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பிரிஸ்டலில் இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் சார்லோட் டீன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 142 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com