2வது டி20 போட்டி: வங்கதேசம் அபார பந்துவீச்சு...இந்தியா 95 ரன்கள் சேர்ப்பு...!

இந்திய அணியில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 19 ரன்கள் எடுத்தார்.
Image Courtesy: @BCCIWomen
Image Courtesy: @BCCIWomen
Published on

மிர்புர்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் 114 ரன்களில் வங்காளதேசத்தை கட்டுப்படுத்திய இந்திய அணி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் மந்தனா 13 ரன், ஷபாலி வர்மா 19 ரன், அடுத்து களம் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 0 ரன், யாஷ்டிகா பாடியா 11 ரன், ஹார்லீன் தியோல் 6 ரன், தீப்தி சர்மா 10 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதனால் இந்திய அணி 82 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச பெண்கள் அணி ஆட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com