2வது டி20: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
லாகூர்,
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி 20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆஹா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
பாகிஸ்தான்:
சாஹிப்சாதா பர்ஹான், சைம் அயூப், சல்மான் ஆஹா , பாபர் அசாம் , உஸ்மான் கான், முகமது நவாஸ், ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப், அப்ரார் அகமது, நசீம் ஷா, உஸ்மான் தாரிக்.
ஆஸ்திரேலியா:
மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் , கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ் , மேட் ரென்ஷா, கூப்பர் கோனோலி, சேவியர் பார்ட்லெட், சீன் அபோட், மேத்யூ குஹ்னெமன், ஆடம் ஜாம்பா.

