இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நீக்கம்..?


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நீக்கம்..?
x

image courtesy:BCCI

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது.

பர்மிங்காம்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி எட்டிப்பிடித்து அசத்தியது.

பென் டக்கெட்டின் அபார சதத்தால் (149 ரன், 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) 82 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த 2-வது போட்டிக்கான இந்திய அணியிலிருந்து இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பர்மிங்காம் சென்ற இந்திய அணியுடன் அவர் பயணிக்கவில்லை. இதனால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story