வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
x

image courtesy:ICC

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

செயின்ட் ஜார்ஜ்,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் ஜார்ஜ் நகரில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரெய்க் பிராத்வைட்டுக்கு இது 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், கேமரூன் கிரீன், ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்

வெஸ்ட் இண்டீஸ்: கிரெய்க் பிராத்வைட், ஜான் கேம்பல், கீசி கார்டி, பிரண்டன் கிங், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ்(கேப்டன்), ஜஸ்டின் கிரீவ்ஸ், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஆண்டர்சன் பிலிப், ஜெய்டன் சீல்ஸ்.

1 More update

Next Story