வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு.. முன்னணி வீரருக்கு இடம்

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

செயின்ட் ஜார்ஜ்,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் ஜார்ஜ் நகரில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விரலில் ஏற்பட்ட காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடாத முன்னணி வீரர் ஸ்டீவ் சுமித் இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், கேமரூன் கிரீன், ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com