2-வது டெஸ்ட்: இங்கிலாந்து லயன்ஸ் - இந்தியா ஏ இடையிலான ஆட்டம் டிரா


2-வது டெஸ்ட்: இங்கிலாந்து லயன்ஸ் - இந்தியா ஏ இடையிலான ஆட்டம் டிரா
x

இந்திய ஏ அணி 2-வது இன்னிங்சில் 417 ரன்களில் டிக்ளேர் செய்தது.

நார்த்தம்டான்,

அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா ஏ கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனையடுத்து இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி நார்த்தம்டானில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்திய ஏ அணி 348 ரன்னும், இங்கிலாந்து லயன்ஸ் 327 ரன்னும் எடுத்தன. அடுத்து 21 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய ஏ அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து ஆடிய இந்திய 'ஏ' அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. தனுஷ் கோடியன் 90 ரன்னுடனும், அன்ஷுல் கம்போஜ் 51 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் 439 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 32 ரன்கள் அடித்திருந்தபோது, ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. கம்போஜ் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.

1 More update

Next Story