தொடர்ந்து 3 சதங்கள்... முதல் வீராங்கனையாக சாதனை படைத்த அன்னாபெல் சதர்லேண்ட்

கடைசியாக அவர் ஆடிய 5 டெஸ்ட் போட்டிகளில் அவருடைய 4-வது சதம் இதுவாகும்.
தொடர்ந்து 3 சதங்கள்... முதல் வீராங்கனையாக சாதனை படைத்த அன்னாபெல் சதர்லேண்ட்
Published on

பெர்த்

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக இருப்பவர் அன்னாபெல் சதர்லேண்ட். 24 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் 2-வது நாளில் அவர் 171 பந்துகளில், 17 பவுண்டரிகளுடன் சதம் அடித்ததுடன் (129 ரன்கள்) சாதனைகளையும் புரிந்திருக்கிறார்.

இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில், அவர் தனக்கான 4-வது சதம் பூர்த்தி செய்ததுடன் அணி முன்னிலை வகிக்கவும் உதவியுள்ளார். அவருக்கு இது 7-வது டெஸ்ட் போட்டியாகும். எனினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 3 சதங்கள் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Also Read
புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்; நாட்டில் டாப் 5-ல் முதல் இடம் பிடித்த உத்தராகண்ட்
தொடர்ந்து 3 சதங்கள்... முதல் வீராங்கனையாக சாதனை படைத்த அன்னாபெல் சதர்லேண்ட்

கடைசியாக அவர் ஆடிய 5 டெஸ்ட் போட்டிகளில் அவருடைய 4-வது சதம் இதுவாகும். இதுதவிர, 5-வது வீராங்கனையாக களமிறங்கிய அவர், எல்லைஸ் பெர்ரியுடன் சேர்ந்து 4-வது விக்கெட்டுக்கு 128 ரன்களையும், பெர்ரிக்கு அடுத்து விளையாட வந்த பெத் மூனியுடன் சேர்ந்து, 5-வது விக்கெட்டுக்கு 54 ரன்களையும் சேர்த்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்காக 715 ரன்களுடன் 8-வது முன்னணி வீராங்கனையாக அவர் உள்ளார். பேட்டிங் சராசரியும் 89 வைத்துள்ளார். 4 முறை அரை சதம் பூர்த்தி செய்து, அவை எல்லாவற்றையும் சதங்களாகவும் மாற்றி சாதனை படைத்துள்ளார். இதுபோக 2024-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அதிக அளவாக 210 ரன்கள் எடுத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com