37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம்


37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம்
x

விழுப்புரம்-எழும்பூர் இடையேயான ரெயில் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் ஹப்பாவுக்கு செல்லும் விரைவு ரெயில் (வண்டி எண்-19577) ஜூன் 15-ல் இருந்து காலை 5.05-க்கு புறப்படும். அதே போல, நெல்லையில் இருந்து புறப்பட்டு குஜராத் காந்திதாம் செல்லும் விரைவு ரெயிலும் (எண்: 20923) காலை 5.05-க்கு புறப்படும்.

கோவையில் இருந்து அரியானா மாநிலம் ஹிசார் செல்லும் விரைவு ரெயில் (எண்:22476) பிற்பகல் 1.30-க்கு கோவையில் இருந்து புறப்படும்.இதே போல, மும்பை தாதரில் இருந்து நெல்லை செல்லும் விரைவு ரெயில் (எண்:22629), நெல்லையில் இருந்து புறப்பட்டு தாதருக்கு செல்லும் ரெயில் (எண்:22630) உள்பட 37 விரைவு ரெயில்களின் நேரமும் மாற்றப்பட்டு உள்ளன.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் சத்திரக்குடி ரெயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில விரைவு ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி திருச்சியில் இருந்து ஜூன் 12, 14, 16, 21, 23 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் காலை 7.05-க்கு புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரெயில் வண்டி எண்.16849 மானாமதுரை, ராமேசுவரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு, மானாமதுரையில் நிறுத்தப்படும்.மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து அதே தேதியில் மாலை 3-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும் விரைவு ரெயில் (எண்:16850), ராமேசுவரம்-மானாமதுரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக மானாமதுரையில் இருந்து மாலை 4.55-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.மேலும், ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 9.10-க்கு புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (எண்:07696) அதற்கு மாற்றாக ராமேசுவரத்தில் இருந்து இரவு 7-க்கு 19 மணி நேரம் 50 நிமிடம் தாமதம்) புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஜூன் 12, 16, 19, 23, 26, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.05-க்கு புறப்பட்டு விஜயவாடா செல்லும் பினாகினி விரைவு ரெயில் (வண்டி எண்.12712), வழக்கத்துக்கு மாறாக சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.25-க்கு (20 நிமிடம் தாமதம்) புறப்பட்டு விஜயவாடா செல்லும்.இதேபோல, திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் விரைவு ரெயில் (வண்டி எண்.20606), பண்ருட்டி ரெயில் நிலையத்தில் காலை 6.04-க்கு வந்து செல்லும்.இன்று (புதன்கிழமை) முதல் 25 நிமிடம் தாமதமாக, அதாவது காலை 6.29-க்கு வரும். ஆனால், திருச்செந்தூர்- திருப்பாதிரிப்புலியூர் மற்றும் விழுப்புரம்-எழும்பூர் இடையேயான ரெயில் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story