

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி கான்பூர் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சினை தேர்வு செய்தது.
இதனை அடுத்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா (147) ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 18 பவுண்டரிகள் அடங்கும்.
அவருடன் இணைந்து விளையாடிய தவான் (14) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் ரோகித்துடன் விளையாடிய கேப்டன் கோஹ்லி 113 ரன்கள் எடுத்து அசத்தினார். ரோகித் மற்றும் கோஹ்லி இணை 230 ரன்கள் வரை ஆட்டமிழக்காமல் விளையாடியது. 2வது விக்கெட்டாக 41.2வது ஓவரில் ரோகித் ஆட்டமிழந்தபின் கோஹ்லி உடன் ஹர்தீக் பாண்டியா விளையாடினார். அவர் 8 ரன்களில் வெளியேறினார்.
தோனி (25), ஜாதவ் (18) ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கார்த்திக் (4) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணி வெற்றி பெற 338 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.