3வது ஒருநாள் போட்டி; ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது.
Image Courtesy: @ZimCricketv
Image Courtesy: @ZimCricketv
Published on

புலவாயோ,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், 1-0 என ஆப்கானிஸ்தான் தொடரில் முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் விளையாடும்.

அதேவேளையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய ஜிம்பாப்வே கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com