3வது ஒருநாள் போட்டி: வங்காளதேசம் - பாகிஸ்தான் நாளை மோதல்

ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

3வது ஒருநாள் போட்டி: வங்காளதேசம் - பாகிஸ்தான் நாளை மோதல்
Published on

டாக்கா,

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்றூ நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com