3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்

வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது.
3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்
Published on

டாக்கா,

வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியே கிரிக்கெட் அணி 3 ஒருநாள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாக்காவில் இன்று காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணியில் தவ்ஹித் ஹிரிதோய் 83 ரன்களும், லிட்டன் தாஸ் 58 ரன்களும், மொசடெக் ஹொசைன் 56 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணியில் ரென்ஸா, பார்ட்லெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com