

லக்னோ,
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஸ்ரேயஸ் அய்யர் தொடர்நாயகன் விருது பெற்றார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது;
என்னிடம் இருந்தோ, அணியின் பயிற்சியாளர்களிடம் இருந்தோ நான் எந்தவித எதிர்பார்ப்பையும் வைத்து இருக்கவில்லை. ஏனெனில் அணியில் அந்த அளவுக்கு அதிகமான போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு வீரர்களும் ஆட்டத்தை வெல்லும் திறன் படைத்தவர்கள். எனக்கு வழங்கப்படும் ஒவ்வொரு தருணத்தையும், வாய்ப்பையும் அனுபவிக்க விரும்புகிறேன்.
ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் பேட்டிங் செய்வதற்கு சிறந்த வரிசை எது? என்று கேட்டால் 3-வது வரிசையையே சொல்வேன் என்று தெரிவித்தார்.