3-வது டி20: சாப்மேன் அதிரடி.. பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து


3-வது டி20: சாப்மேன் அதிரடி.. பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
x

image courtesy:twitter/@ICC

தினத்தந்தி 21 March 2025 1:37 PM IST (Updated: 21 March 2025 1:40 PM IST)
t-max-icont-min-icon

நியூசிலாந்து தரப்பில் அதிரடியாக விளையாடிய மார்க் சாப்மேன் 94 ரன்கள் குவித்தார்.

ஆக்லாந்து,

நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 3-வது போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது. இருப்பினும் அந்த அணியில் மார்க் சாப்மேன் விக்கெட் விழுவதை நினைத்து கவலைப்படாமல் அதிரடியில் பட்டையை கிளப்பினார். பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்களில் (44 பந்துகள்) ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 31 ரன்கள் அடித்தார்.

19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த நியூசிலாந்து 204 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகளும், ஷாகீன் அப்ரிடி, அப்ரார் அகமது மற்றும் அப்பாஸ் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்க உள்ளது.


1 More update

Next Story