

டர்பன்,
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொட ரில் விளையாட தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 2 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.