3வது டி20: இலங்கை - பாகிஸ்தான் நாளை மோதல்

கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
3வது டி20: இலங்கை - பாகிஸ்தான் நாளை மோதல்
Published on

கொழும்பு,

டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இதற்கிடையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ளது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது  போட்டி நேற்று நடைபெற இருந்தது. மழையால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல பாகிஸ்தான் முனைப்பு காட்டும்.அதே நேரத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இலங்கை விளையாடும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com