

டாக்கா,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இன்று 3-வது டி20 போட்டி நடைபெற்று வரும் நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. மழை காரணமாக ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
வங்காளதேச அணி 14.2 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹ்ரித்தாய் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.