

ராய்ப்பூர்,
3-வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா கைப்பற்றியுள்ளது.
முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 2-வது போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதற்கிடையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசிப் போட்டி இன்று (அக்டோபர் 20) ராய்ப்பூரில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச உள்ளது.
தொடரை ஏற்கெனவே வென்றுள்ள இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.