ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது டி20; டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் தேர்வு

ஜிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.
Image Courtesy: @ACBofficials
Image Courtesy: @ACBofficials
Published on

ஹராரே,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியும், 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com