இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 315/9

இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ஹாமில்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் இன்று தொடன்கியது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் வில் யங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் வில் யங் 42 ரன்னிலும், அடுத்து வந்த வில்லியம்சன் 44 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய டாம் லாதம் அரைசதம் அடித்த நிலையில் 63 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய ரச்சின் ரவீந்திரா 18 ரன், டேரில் மிட்செல் 14 ரன், டாம் பிளெண்டல் 21 ரன், க்ளென் பிலிப்ஸ் 5 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த சாண்ட்னெர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் மேட் ஹென்றி 8 ரன், டிம் சவுதி 23 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து வில்லியம் ஓ ரூர்க் களம் இறங்கினார்.

மறுபுறம் சாண்ட்னெர் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் சாண்ட்னெர் 50 ரன்னுடனும், வில்லியம் ஓ ரூர்க் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com