பஞ்சாபை பதற்றம் அடையச் செய்த 43 வயது விவசாயி: தோனியை புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்

முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
Image Courtesy: @IPL
Image Courtesy: @IPL
Published on

முல்லன்பூர்,

ஐ.பி.எல் தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா 43 பந்தில் 103 ரன்கள் எடுத்தார்.

சென்னை தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக டெவான் கான்வே 69 ரன்கள் எடுத்தார்.

இந்தப்போட்டியின் ஆட்டநாயகன் விருது பிரியன்ஷ் ஆர்யாவுக்கு வழங்கப்பட்டது. சென்னை அணியின் பேட்டிங்கில் பின்வரிசையில் களமிறங்குவதாக தோனி மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் அவர் 5வது வீரராக களமிறங்கினார். 12 பந்துகளை சந்தித்த தோனி 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பஞ்சாப் அணி வீரர்களை பதற்றம் அடையச் செய்த 43 வயதுடைய விவசாயி. தனக்கான தோரணையோடு தோனி களத்தில் தொடர்கிறார். மரம் நடும் சேவையை மாற்றிக்கொண்டு மஞ்சள் ரசிகர்களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் என பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com