ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம்.. காரணம் என்ன..?


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம்.. காரணம் என்ன..?
x

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் 4-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

துபாய்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.2 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 206 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. இது ஐ.சி.சி. 2.22 விதிமுறையை மீறிய குற்றமாகும். எனவே அந்த ஆட்டத்திற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றிருந்த அனைத்து வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story