

பிரிட்ஜ்டவுன்,
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதில் இரு அணிகளுக்குமான நான்காவது டி20 போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜேசன் ராய் 52 ரனகள் விளாசினார். மொயீன் அலி அதிரடியாக விளையாடி 63 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தும், அதனை சரிவர பயன்படுத்த தவறியது. கடைசி நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் அதிரடி காட்டத்தவறினர். களத்தில் பொல்லார்டு இருந்தும், அந்த அணியால் வெற்றிபெற முடியவில்லை. முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 34 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய மொயீன் அலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்குமான கடைசி டி20 போட்டி இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 1.30 மணியளவில் நடைபெற உள்ளது.