4-வது டி20: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
4-வது டி20: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
Published on

கோல்டுகோஸ்ட்,

ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 போட்டி கோல்டுகோஸ்டில் உள்ள கரரா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com