

ஜோகன்னஸ்பர்க்,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் 4-வது போட்டி இன்று (ஏப்ரல் 25) ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.
தொடரை இழந்துவிட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபிக்க இந்திய மகளிர் அணி தீவிர முயிற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.