4-வது டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா.. யாருக்கெல்லாம் இடம்..?

image courtesy:BCCI
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.
மும்பை,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நாளை தொடங்குகிறது. இதனையொட்டி இந்திய அணியின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யாரெல்லாம் இடம் பெற போகிறார்கள்? என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. ஏனெனில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் உள்ளிட்ட சில வீரர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட், துருவ் ஜூரல் இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஆனால் தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை அவர் தேர்வு செய்யவில்லை.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர், சுப்மன் கில், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அன்ஷுல் கம்போஜ் அல்லது ஆகாஷ் தீப்






