4வது டெஸ்ட்; சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்


4வது டெஸ்ட்; சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 22 July 2025 9:00 AM IST (Updated: 22 July 2025 9:00 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி நாளை தொடங்க உள்ளது.

தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கருண் நாயருக்கு பதிலாக இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சனை விளையாட வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் சாய் சுதர்சனை விளையாட வைக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்திய அணியின் மூன்றாவது இடத்தில் விளையாட சாய் சுதர்சனை தான் பரிந்துரை செய்வேன். ஏனெனில் ஒரு இளம் வீரருக்கு, ஒரு வாய்ப்பை மட்டுமே வழங்கி அவரை தூக்கி எறிவது சரி கிடையாது.

அவருக்கு மூன்றாம் இடத்தில் விளையாட குறைந்தது மூன்று போட்டிகளாவது வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே அவரிடம் இருக்கும் திறமை வெளிப்படும். அதை தவிர்த்து கருண் நாயருக்கு அந்த இடத்தை வழங்கி அதில் அவர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். என்னைப் பொறுத்தவரை இளம் வீரரான சாய் சுதர்சனிடம் நல்ல திறமை உள்ளது.

அவரை இந்திய அணியின் நிர்வாகம் ஆதரிக்க வேண்டும். முதல் போட்டியில் கருண் நாயரை தாண்டி சாய் சுதர்சன் விளையாடினார். அதேபோன்று இனிவரும் இரண்டு போட்டிகளிலும் கருண் நாயரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சாய் சுதர்சன் விளையாட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story