ஒரே ஓவரில் 5 சிக்சர்... சாதனை பட்டியலில் இணைந்த ரியான் பராக்

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரியான் பராக் 95 ரன்கள் அடித்தார்.
Image Courtesy: @IPL / @KKRiders / @rajasthanroyals
Image Courtesy: @IPL / @KKRiders / @rajasthanroyals
Published on

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 52 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரசல் 57 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் மொயீன் அலி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 13வது ஓவரை மொயீன் அலி வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தில் இருந்து ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ரியான் பராக் தொடர்ந்து 5 சிக்சர்களை அடித்து அமர்களப்படுத்தினார். இதன் மூலம் அவர் சாதனை பட்டியல் ஒன்றிலும் இடம் பிடித்துள்ளார். அதாவது, ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரியான் பராக் இணைந்துள்ளார்.

ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்:

கிறிஸ் கெயில் - பந்துவீச்சாளர் ராகுல் சர்மா, 2012

ராகுல் தெவேதியா - பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல், 2020

ரிங்கு சிங் - பந்துவீச்சாளர் யாஷ் தயாள், 2023

ரியான் பராக் - பந்துவீச்சாளர் மொயீன் அலி, 2025

X

Daily Thanthi
www.dailythanthi.com