5வது டி20 போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

5வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
5வது டி20 போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு
Published on

ஆமதாபாத்,

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது, 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.

இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி பேட்டிங் செய்கிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக ஆடிய 5 தொடர்களை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து அணி தனது கடைசி எட்டு 20 ஓவர் தொடர்களை இழந்ததில்லை. இதனால், இன்று நடைபெறும் 5வது மற்றும் இறுதி போட்டி ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com