5வது டி20 போட்டி: 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா

5வது டி20 போட்டி திருவானந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.
திருவனந்தபுரம்,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி 12 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்த நிலையில் தடுமாறி வருகிறது. கேப்டன் ஹனுமந்த்பிரீத் கவுர் 33 ரன்னிலும், அமன்ஜித் கவுர் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story






