5வது டி20 போட்டி: இலங்கைக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா

டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது
5வது டி20 போட்டி: இலங்கைக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா
Published on

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறு வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்துள்ளது.

தொடக்கத்தில் இந்திய அணி தடுமாறிய நிலையில் கேப்டன் ஹனுமந்த்பிரீத் கவுரின் அதிரடி ஆட்டத்தால் 175 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ஹனுமந்த்பிரீத் கவுர் 43 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் இலங்கை களமிறங்கி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com