6 இந்திய வீரர்களுக்கு விஸ்டன் கவுரவம்

சிறந்த கிரிக்கெட் வீரர்களைதேர்வு செய்து கவுரவிக்கிறது.
6 இந்திய வீரர்களுக்கு விஸ்டன் கவுரவம்
Published on

லண்டன்,

நூற்றாண்டு காலம் பாரம்பரியமிக்க இங்கிலாந்தை சேர்ந்த விஸ்டன் கிரிக்கெட் இதழ்ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களைதேர்வு செய்து கவுரவிக்கிறது. 'கிரிக்கெட்டின் பைபிள்' என்று வர்ணிக்கப்படும் விஸ்டன், முந் தைய சீசனில் கோடை காலத்தில் இங்கிலாந்தில் நடக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் 5 வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின்அருமை, பெருமைகளை சுட்டிகாட்டி தனது இதழில் வெளியிட்டு புகழாரம் சூட்டும். அந்த வகை யில் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலக்கிய இந்திய கேப்டன் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடும் ஹசீப் ஹமீது ஆகியோர் ஆண்டின்சிறந்த கிரிக்கெட் வீரர்களாக தேர்வாகியுள்ளனர்.

இதே போல் உலகம் முழுவதும் நடக்கும் போட்டிகளில் பிரமாதமாக செயல்படும் வீரர், வீராங்கனைகளும் கவுரவிக்கப்படுகிறார்கள். இதன்படி உலகின் சிறந்த முன்னணி வீரராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் , உல கின் சிறந்த முன்னணி வீராங்கனையாக இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர் மாவும் தேர்வாகியுள்ளனர். டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை இந்தியாவின் அபிஷேக் ஷர்மா தட்டிச் சென்றார். மேலும் ஒரு போட்டியில் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியமைக்கான விஸ்டன் தனிநபர் விருதும் சுப்மன் கில்லுக்கு கிடைத்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com