கடைசி ஓவரில் 8 ரன்கள்... யாரிடம் பந்தை கொடுப்பீர்கள்? - ஸ்மிருதி மந்தனா சுவாரசிய பதில்

ஸ்மிருதி மந்தனா தலைமையில், ஆர்சிபி அணி 2024 மற்றும் 2026 மகளிர் பிரீமியர் லீக் பட்டங்களை வென்று சாதனை படைத்தது.
கடைசி ஓவரில் 8 ரன்கள்... யாரிடம் பந்தை கொடுப்பீர்கள்? - ஸ்மிருதி மந்தனா சுவாரசிய பதில்
Published on

மும்பை,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், முன்னணி தொடக்க ஆட்டக்காரருமான ஸ்மிருதி மந்தனா, கடைசி ஓவரில் எதிரணிக்கு 8 ரன்கள் தேவைப்படும் இக்கட்டான சூழ்நிலையில் யாரிடம் பந்தை கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு சுவாரசியமான பதிலை அளித்துள்ளார்.

ஸ்ரேயங்கா பாட்டீலை தேர்வு செய்த மந்தனா

இந்த கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல் ஸ்ரேயங்கா பாட்டீல் பெயரை ஸ்மிருதி மந்தனா குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில்,

"நான் ஸ்ரேயங்கா பாட்டீலை பந்துவீச வைப்பேன் என்று நினைக்கிறேன். அவரிடம் சிறந்த ஆப்-ஸ்பின் உள்ளது. அதோடு நல்ல யார்க்கர்களையும் வீச முடியும். தேவைப்பட்டால் பவுன்சரும் வீசுவார். மேலும், 'பேக் ஆப் தி ஹேண்ட்' ஸ்லோயர் பந்துகளையும் பயன்படுத்துவார். தன்னை நிரூபிக்க அவரிடம் பலவிதமான ஆயுதங்கள் உள்ளன" என்றார்.

ஆர்சிபி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு

பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்மிருதி மந்தனா தலைமையில், ஆர்சிபி அணி 2024 மற்றும் 2026 மகளிர் பிரீமியர் லீக் பட்டங்களை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியில் ஸ்ரேயங்கா பாட்டீலும் முக்கிய பங்கு வகித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com