3 ஓவர்கள் வீசி 9 விக்கெட்டுகள்: புதிய வரலாறு படைத்த கிரிக்கெட் வீராங்கனை

பிரேசில் அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3 ஓவர்கள் வீசி 9 விக்கெட்டுகள்: புதிய வரலாறு படைத்த கிரிக்கெட் வீராங்கனை
Published on

ரியோ டி ஜெனிரா,

பிரேசில் மகளிர் கிரிக்கெட் அணியினர், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள லெசோதோ நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடினர். இதில் முதலில் பேட்டிங் செய்த பிரேசில் அணி, 20 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லெசோதோ அணி களமிறங்கியது.

ஆனால் அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. குறிப்பாக, பிரேசில் சுழற்பந்துவீச்சாளர் லாரா கார்டசோ, அந்த அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவர் 3 ஓவர்கள் மட்டுமே வீசி, 9 விக்கெட்டுகளை அறுவடை செய்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் லாரா புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் பிரேசில் அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பந்துவீச்சு பின்வருமாறு;

எல். கார்டோசோ – 3-2-4-9, லெசோதோ மகளிர் அணிக்கு எதிராக, 9 ஏப்ரல் 2026

எஸ். யேஷே – 4-1-7-8, மியான்மர் அணிக்கு எதிராக, 26 டிசம்பர் 2025

ஆர். ரோமாலியா – 3.2-3-0-7, மங்கோலியா மகளிர் அணிக்கு எதிராக, 24 ஏப்ரல் 2024

எப். ஓவர்டைக் – 4-2-3-7, பிரான்ஸ் மகளிர் அணிக்கு எதிராக, 26 ஆகஸ்ட் 2021

ஏ. ஸ்டாக்ஸ் – 3.4-0-3-7, பெரு மகளிர் அணிக்கு எதிராக, 14 அக்டோபர் 2022

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com