92-வது ரஞ்சி கோப்பை தொடர் அக்டோபர் 11-ல் தொடங்கும்- இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இந்த சீசனுக்கான 92-வது ரஞ்சி தொடர் அக்டோபர் 11-ந்தேதி தொடங்கி இரண்டு கட்டமாக நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

92-வது ரஞ்சி கோப்பை தொடர் அக்டோபர் 11-ல் தொடங்கும்- இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட்டில் முதன்மையான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த சீசனுக்கான 92-வது ரஞ்சி தொடர் அக்டோபர் 11-ந்தேதி தொடங்கி இரண்டு கட்டமாக நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முதற்கட்ட ஆட்டங்கள் அக்.11-ந்தேதி முதல் நவ.5-ந்தேதி வரையும், 2-வது கட்ட ஆட்டங்கள் அடுத்த ஆண்டு ஜன.17-ந்தேதி முதல் மார்ச் 3-ந்தேதி வரையும் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

ஜூனியர், சீனியர், பல்வேறு வயது பிரிவு என மொத்தம் 1,788 ஆட்டங்களை கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. துலீப் கோப்பை கிரிக்கெட் ஆகஸ்டு 23-ந்தேதி முதல் செப்டம்பர் 10-ந்தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. நடப்பு ரஞ்சி சாம்பியன் ஜம்மு-காஷ்மீர்-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையே நடக்கும் இரானி கோப்பை போட்டி அக்டோபர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை ஸ்ரீநகரில் நடக்கிறது. சையத் முஷ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவ.14 முதல் டிச.6-ந்தேதி வரையும், விஜய் ஹசாரே கோப்பைக்கான 50 ஓவர் போட்டி டிச.14-ந்தேதி முதல் ஜன.8-ந்தேதியும் நடத்தப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com