’பெருங்கனவு நனவாகியுள்ளது’ - இந்திய ஜெர்ஸியை பெற்ற வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சி

வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
’பெருங்கனவு நனவாகியுள்ளது’ - இந்திய ஜெர்ஸியை பெற்ற வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சி
Published on

புது டெல்லி,

இந்திய ஜெர்ஸியை பெற்ற வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சி பெருங்கனவு இன்று நனவாகியுள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டி20 தொடர்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அபாரமாக விளையாடி கவனம் ஈர்த்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய ஜெர்ஸி

இந்திய அணிக்கான ஜெர்ஸியை பெற்றுக்கொண்ட வைபவ் சூர்யவன்ஷி, வரும் 26-ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்திய ஜெர்ஸியை கையில் ஏந்திய அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கனவு நனவான தருணம்

இந்நிலையில், தேசிய அணியில் தேர்வானது குறித்து வீடியோ ஒன்றில் பேசிய வைபவ் சூர்யவன்ஷி, "இந்த உணர்வை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. ஆரம்பத்தில் நான் எந்த காரணத்திற்காக கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்துக்கொண்டு மைதானத்திற்கு பயிற்சி செய்ய சென்றேனோ, அந்த பெருங்கனவு இன்று நனவாகியுள்ளது. இந்திய டி20 அணியில் தனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, தனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையின் மிக பெரிய காரணி மற்றும் முக்கிய படி" என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com