

சென்னை,
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ள இந்தியா ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொடரின் மூலம் இளம் இந்திய வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. ஆஸ்திரேலிய சூழலில் விளையாடும் வீரர்களுக்கு பாலாஜியின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்காக விளையாடியுள்ள லட்சுமிபதி பாலாஜி, சர்வதேச கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக தனது முத்திரையை பதித்தவர். ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளர் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.