இதுவரை பார்க்காத தோற்றம்; புது ஹேர்ஸ்டைலில் தோனி... வைரலாகும் புகைப்படங்கள்

தோனியின் புது ஹேர்ஸ்டைலை கொண்ட புகைப்படங்களுக்கு, 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக்குளை அள்ளி குவித்து உள்ளனர். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விமர்சனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.
இதுவரை பார்க்காத தோற்றம்; புது ஹேர்ஸ்டைலில் தோனி... வைரலாகும் புகைப்படங்கள்
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபோதும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட 43 வயது நிறைந்த தோனி, இந்த முறை தன்னுடைய ஹேர்ஸ்டைலை புதிதாக மாற்றியுள்ளார்.

அதே பழுப்பு வண்ணத்தில் தலைமுடி இருந்தபோதும், பழைய தோற்றத்தில் இருந்து வேறுபட்ட வகையில் காட்சியளிக்கும் அவருடைய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகின்றன. பிரபல ஹேர்ஸ்டைல் நிபுணரான ஆலிம் ஹகீம், தோனியின் இந்த புதிய தோற்றத்திற்கு வடிவம் கொடுத்திருக்கிறார்.

தி ஒன் அண்டு ஒன்லி அவர் (நம்முடைய) தல என தலைப்பிட்டு ஹகீம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்களுக்கு, முதல் 3 மணிநேரத்தில் 1.5 லட்சம் பேர் லைக் அளித்துள்ளனர். மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக்குளை அள்ளி குவித்து உள்ளனர். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விமர்சனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.

தோனியின் புது ஹேர்ஸ்டைல் பற்றிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இதனால், அவரை விரும்பி பின்பற்றும் ரசிகர்கள் பலரும் இனி இந்த புதிய ஹேர்ஸ்டைலை பின்பற்றி, தங்களையும் அலங்கரித்து கொள்ளும் சாத்தியமும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com