டி20 வரலாற்றில் கிறிஸ் கெய்லின் மாபெரும் சாதனையை சமன் செய்த ஆரோன் ஜோன்ஸ்

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்கள் குவித்தார்.
டி20 வரலாற்றில் கிறிஸ் கெய்லின் மாபெரும் சாதனையை சமன் செய்த ஆரோன் ஜோன்ஸ்
Published on

டல்லாஸ்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரின் முதலாவது ஆட்டத்தில் அமெரிக்கா - கனடா அணிகள் டல்லாஸ் நகரில் மோதின.

இதில் டாஸ் வென்ற அமெரிக்க அணியின் மோனாங்க் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கனடா 20 ஓவர்களில் 194 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நவ்நீத் தலிவால் 61 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா வெறும் 17.4 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆரோன் ஜோன்ஸ் 10 சிக்சர்கள் உட்பட 94 ரன்கள் குவித்தார்.

ஆரோன் ஜோன்ஸ் இந்த ஆட்டத்தில் அடித்த 10 சிக்சர்கள் மூலம் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த கிறிஸ் கெய்லை அவர் சமன் செய்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. கிறிஸ் கெய்ல் - 11 சிக்சர்கள்

2. ஆரோன் ஜோன்ஸ் / கிறிஸ் கெய்ல் - 10 சிக்சர்கள்

3. ரோசோவ் - 8 சிக்சர்கள்

X

Daily Thanthi
www.dailythanthi.com