டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லும்- டிவில்லியர்ஸ் கணிப்பு

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லும் என ஏபி டிவில்லியர்ஸ் கணித்துள்ளார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகிறது. சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

முதல் அரையிறுதிப்போட்டியில் நாளை நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னியில் விளையாடுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நவம்பர் 10 ஆம் தேதி அடிலெய்டில் விளையாடுகின்றன.

இந்த நிலையில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கணித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் "இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் என கருதுகிறேன். அதில் வென்று உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றும் என நினைக்கிறேன்.

சூர்யகுமார் யாதவ், விராட் கோலி என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை இந்திய அணி கொண்டுள்ளது. அது மட்டுமல்ல எனது பார்வையில் ஒட்டுமொத்த அணியிலும் திறமையான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி அரையிறுதியில் வெற்றி பெற்றால் நிச்சயமாக உலகக் கோப்பையை வெல்வார்கள்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com